/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊழியரை கடத்தி தங்கக்கட்டி பறிப்பு: வடமாநில இளைஞர் கைது; 1.350 கிலோ தங்கக்கட்டி மீட்பு

ADDED : ஆக 19, 2025 01:21 AM

காரைக்குடி; காரைக்குடியில் நகைக்கடை ஊழியரை கடத்தி தங்கக் கட்டிகளை பறித்துச் சென்ற வட மாநில இளைஞரிடம் இருந்து 1.350 கிலோ தங்க கட்டிகளை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர்.
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் விஜயராஜா 42. இவர் மதுரையில் உள்ள நகைக்கடையில் டெஸ்டிங் சென்டரில் வேலை செய்து வந்தார். இவர் ஜூலை 4 இரவு காரைக்குடிக்கு 1.700 கிலோ தங்க கட்டிகளுடன் பஸ்சில் வந்தவர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றார். காரில் வந்த சிலர் இவரை கடத்திச் சென்று, தங்க கட்டிகளை பறித்து சென்றனர். ஏ.எஸ்.பி., ஆசிஷ் புனியா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், சித்திரைச்செல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் விஜயராஜாவுடன் வேலை செய்து வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த அபிமன்யூ என்ற மனோஜ் 38, என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மகாராஷ்டிராவை சேர்ந்த தேவ்பா 40, பிரசாத் 24, துக்காராம் 34, ஆகியோரை கைது செய்தனர். தங்க கட்டியுடன் தப்பிய மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சேத்தன் 35, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1.350 கிலோ தங்க கட்டிகளை கைப்பற்றினர். மீதமுள்ள 350 கிராம் தங்க கட்டிகளையும், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.