/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குஷ்பு உருவ பொம்மை எரிப்பு எம்.எல்.ஏ., சேலையில் தீ
/
குஷ்பு உருவ பொம்மை எரிப்பு எம்.எல்.ஏ., சேலையில் தீ
குஷ்பு உருவ பொம்மை எரிப்பு எம்.எல்.ஏ., சேலையில் தீ
குஷ்பு உருவ பொம்மை எரிப்பு எம்.எல்.ஏ., சேலையில் தீ
ADDED : மார் 14, 2024 03:44 AM

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் பா.ஜ., மகளிர் அணி நிர்வாகி குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரை ஆனந்த், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ேஹமலதா, துணை அமைப்பாளர் திலகவதி, கவுன்சிலர் பாக்கிலட்சுமி கலந்து கொண்டனர். பா.ஜ., நிர்வாகி குஷ்புவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் குஷ்புவின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர். போலீசார் குஷ்பு உருவபொம்மையை மீட்டு அப்புறப்படுத்தினர். பின்னர் குஷ்புவின் புகைப்படத்தை எரித்தனர். அப்போது அருகில் இருந்த எம்.எல்.ஏ., தமிழரசி சேலையில் தீ பட்டது.
இதனை அருகிலிருந்த தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் கையால் உடனடியாக அணைத்தனர்.

