/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓராண்டாக மூடிக் கிடந்த காதி பவன் கடைகள் திறப்பு
/
ஓராண்டாக மூடிக் கிடந்த காதி பவன் கடைகள் திறப்பு
ADDED : ஏப் 08, 2025 05:26 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் மூடப்பட்டு கிடந்த சர்வோதயா சங்க காதி பவன் கடைகள் நேற்று திறக்கப்பட்டது.
காரைக்குடி சர்வோதயா சங்கத்தின் கீழ் காரைக்குடி, கண்டனூர், பள்ளத்தூர், உட்பட சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சர்வோதயா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் 13 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, காதி பவன் கடைகளை அடைத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வந்தனர். கடந்த ஓராண்டாக நடந்துவரும் இப்பிரச்னையால், சங்க உறுப்பினர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதன் காரணமாக ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
காரைக்குடி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ராஜா முன்னிலையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில், சர்வோதயா சங்க நிர்வாகிகள், முறையாக சங்க உறுப்பினர்களோடு கலந்தாலோசித்து தேர்தல் நடத்தி சங்க நிர்வாகிகளை முடிவு செய்ய வேண்டும்.
செயல்படாமல் மூடப்பட்டுள்ள கடைகளை ஏப்.7ம் தேதி திறந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்று, காரைக்குடியில் உள்ள 2 கடைகள் உட்பட மாவட்டத்தில் உள்ள 9 சர்வோதயா சங்க காதி பவன் கடைகள் திறக்கப்பட்டது.

