/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இரண்டாம் போக நெல் நடவு தீவிரம்; மானாமதுரை விவசாயிகள் ஆர்வம்
/
இரண்டாம் போக நெல் நடவு தீவிரம்; மானாமதுரை விவசாயிகள் ஆர்வம்
இரண்டாம் போக நெல் நடவு தீவிரம்; மானாமதுரை விவசாயிகள் ஆர்வம்
இரண்டாம் போக நெல் நடவு தீவிரம்; மானாமதுரை விவசாயிகள் ஆர்வம்
ADDED : பிப் 04, 2024 11:41 PM
மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடி பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் துவக்கியுள்ளனர்.
மானாமதுரை பகுதியில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் தொடர் மழையின் காரணமாகவும் வைகை ஆற்றில் தொடர்ந்து 2 மாதமாக தண்ணீர் வந்ததின் காரணமாகவும் ஏராளமான பகுதிகளில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து தற்போது அறுவடை செய்த நெல்களை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், தனியாரிடமும் விற்பனை செய்து வருகின்றனர்.
மானாமதுரையை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் உள்ள கண்மாய்களில் போதுமான அளவிற்கு நீர் இருப்பு உள்ளதாலும், கிணறுகளில் நீர்மட்டம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து கால்பிரபு, பீசர் பட்டணம் உள்ளிட்ட பகுதிகள், இளையான்குடியில் கீழனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடியை துவக்கியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, வைகை ஆற்றை ஒட்டியுள்ள கால்பிரபு, பீசர்பட்டினம், மிளகனூர், மேட்டுமடை பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கண்மாய, கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், வயல்களை தயார்படுத்தி 2ம் போக சாகுபடியை துவக்கி விட்டனர், என்றனர்.

