/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏனாதி-செங்கோட்டை மேம்பாலத்தில் ஓட்டை
/
ஏனாதி-செங்கோட்டை மேம்பாலத்தில் ஓட்டை
ADDED : டிச 21, 2024 07:09 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே ஏனாதி செங்கோட்டையில் கட்டிய ஒரு வருடத்திற்குள் மேம்பாலத்தில் ஓட்டை விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
மானாமதுரை அருகே உள்ள ஏனாதி செங்கோட்டையில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு வருபவர்கள் வேதியரேந்தல் செல்லும் ரோட்டில் ஏனாதி செங்கோட்டை விலக்கில் இறங்கி பார்த்திபனுார் மதகணையிலிருந்து செல்லும் இடது பிரதான கால்வாயில் உள்ள பாலத்தை கடந்து வந்தனர்.
இந்தப் பாலம் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆனதைத் தொடர்ந்து கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த வருடம் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
தற்போது பாலத்தின் ஓரத்தில் இணைப்பு பகுதியில் ஓட்டை விழுந்ததை தொடர்ந்து இந்த பாலத்தின் வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு வருகின்றனர்.
பக்தர்கள் கூறுகையில், ஏற்கனவே இருந்த பாலம் மிகவும் சேதமடைந்த நிலையில் நீண்ட காலம் போராடிய பிறகு புதிய மேம்பாலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் கட்டப்பட்டது.
ஆனால் அந்த பாலத்திலும் இணைப்பு பகுதியில் ஓட்டை விழுந்ததால் வாகனங்களில் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
மேலும் பாலத்திற்கு கீழே தற்போது இடது பிரதான கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் நடந்து செல்ல கூட ஏராளமானோர் தயங்கி வருகின்றனர்.
மேலும் இந்த பாலத்தை தவிர ஊருக்குள் செல்வதற்கு வேறு வழி இல்லாத காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேதமடைந்த பாலத்தை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

