/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு ஊழியர்கள் பிப்.26 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு மாநில செயலாளர் பேட்டி
/
அரசு ஊழியர்கள் பிப்.26 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு மாநில செயலாளர் பேட்டி
அரசு ஊழியர்கள் பிப்.26 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு மாநில செயலாளர் பேட்டி
அரசு ஊழியர்கள் பிப்.26 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு மாநில செயலாளர் பேட்டி
ADDED : பிப் 14, 2024 02:01 AM

சிவகங்கை:''தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன், பறிக்கப்பட்ட சரண்டரை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து, பிப்., 26 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஈடுபட உள்ளது,'' என சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் தமிழரசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழக அரசிடம் வருவாய்துறை அலுவலர்கள், 10 அம்ச கோரிக்கையை முன் வைத்துள்ளோம். உச்சநீதிமன்றம் தீர்ப்பின் காரணமாக துணை தாசில்தார்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் என மாற்றம் செய்துள்ளது.
அக்கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும். அலுவலக உதவியாளர் காலிபணியிடம் நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள பணியிடங்களை வழங்க வேண்டும்.
'2024 எம்.பி., தேர்தல் செலவினத்திற்கான நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து, நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினோம். இதில் மாநில அளவில் 16 ஆயிரம் வருவாய்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு எங்களை அழைத்து பேசாவிட்டால், பிப்., 22 முதல் அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
ஜாக்டோ ஜியோ அமைப்புடன் இணைந்து, பழைய பென்ஷன், பறிக்கப்பட்ட சரண்டரை வழங்க வலியுறுத்தி பிப்., 15 அன்று ஒட்டுமொத்த அரசு ஊழியர், ஆசிரியர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தமும், பிப்., 26 முதல் தொடர் 'ஸ்டிரைக்கிலும்' ஈடுபட உள்ளோம் என்றார்.

