/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகருக்குள் வர மறுக்கும் அரசு பஸ்கள்! அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு இல்லை
/
நகருக்குள் வர மறுக்கும் அரசு பஸ்கள்! அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு இல்லை
நகருக்குள் வர மறுக்கும் அரசு பஸ்கள்! அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு இல்லை
நகருக்குள் வர மறுக்கும் அரசு பஸ்கள்! அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு இல்லை
ADDED : மார் 31, 2024 11:36 PM
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், பெருநாழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
மதுரை நகருக்கு அருகில்திருப்புவனம் அமைந்திருப்பதால் கிராமங்களில் இருந்து பலரும் திருப்புவனத்திற்கு குடியேறி வருகின்றனர். இதனால் திருப்புவனத்தில் குடியிருப்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
திருப்புவனத்தில் இருந்து தினசரி மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பணி நிமித்தமாகவும், மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றிற்காகவும் பலரும் சென்று வருகின்றனர். ஒன் டூ ஒன், ஒன் டூ த்ரீ உள்ளிட்ட பஸ்கள் தவிர மற்ற அனைத்து பஸ்களும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட கிராமங்களுக்குள் வந்து செல்ல வேண்டும் என உத்தரவு உள்ளது.
ஆனால் நடைமுறையில் அரசு பஸ்கள் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுப்பதுடன் அவதுாறாகவும் பேசுகின்றனர். அதிலும் மதுரை கோட்டத்தை சேர்ந்த எந்த பஸ்களும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி வருவதே இல்லை.
மதுரை மாட்டுத்தாவணியில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகள் பஸ்களில் ஏற கூடாது என்றே கண்டக்டர்கள் கெடுபிடி காட்டுகின்றனர். இதனால்பயணிகளில் மதுரை மாட்டுத்தாவணியில் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பொதுமக்கள் கூறுகையில், திருப்புவனத்தில் நிரந்தரமாக நேர கட்டுப்பாட்டாளர் நியமித்து கிராமத்திற்குள் வராத பஸ்களை கணக்கெடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாயமங்கலத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் அவைகளும் திருப்புவனம், திருப்பாச்சேத்தியை புறக்கணித்தே வருகின்றன.
எனவே கிராமத்திற்குள்வராத பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

