/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் காலி மனைகளில் குவியும் குப்பை: நகராட்சி எச்சரிக்கையை அலட்சியம் செய்யும் மக்கள்

ADDED : பிப் 15, 2024 05:22 AM

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சியில் காலியிடங்கள் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இட உரிமையாளர்கள் காலியிடத்தை சுத்தம் செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நகராட்சி உத்தரவு செயல்பாட்டில் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
தேவகோட்டை நகரில் பல இடங்கள் கருவேல் மரங்கள், மற்றும் செடி கொடிகள் வளர்ந்து மண்டி கிடக்கின்றன. 27 வார்டுகளும் புதர் மண்டி இருப்பதால் ஏராளமான பாம்புகள் வீடுகளுக்குள் வர ஆரம்பித்து விட்டது. ஓரிரு மாதங்களில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்து அருகில் உள்ள சங்கரபதி காட்டு பகுதியில் விட்டுள்ளனர்.
முட்புதர் மண்டி காடாக இருப்பதால் அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காலி மனைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். புதருக்குள் இருக்கும் குப்பையை நகராட்சி பணியாளர்கள் அள்ளவது இல்லை. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைநீர் தேங்கி கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
நகராட்சி உத்தரவு: பாம்புகளின் படையெடுப்பு, தேங்கி நிற்கும் தண்ணீரில் உருவாகும் கொசு தொல்லை காரணமாக நகராட்சி துணை தலைவர் ரமேஷ் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் நகராட்சி கூட்டத்தில் மக்களின் அவதி குறித்து கூறி முட்புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் நகரில் காலியாக உள்ள இடங்களில் மண்டி கிடக்கும் புதரை இட உரிமையாளர்களே அகற்ற வேண்டும், இல்லையேல் நகராட்சி சார்பில் அகற்றிவிட்டு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார். நகராட்சி உத்தரவு காற்றோடு காணாமல் போய்விட்டது.