/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் குப்பையால் சுகாதாரக்கேடு
/
திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் குப்பையால் சுகாதாரக்கேடு
திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் குப்பையால் சுகாதாரக்கேடு
திருக்கோஷ்டியூர் கோயில் குளத்தில் குப்பையால் சுகாதாரக்கேடு
ADDED : அக் 29, 2024 05:17 AM

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் கோயில் முன்புறமுள்ள குளத்தை சுற்றிலும் குவிந்துஉள்ள குப்பை, புதர்களை அகற்றி சுகாதாரமான பகுதியாக மாற்ற பக்தர்கள் கோரியுள்ளனர்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் முன் உள்ளது திருப்பாற்கடல் எனப்படும் கோயில் குளம். இக்குளம் கடந்த 4 ஆண்டுகளுக்கு பின் அண்மையில் பெய்த மழையாலும், மணிமுத்தாற்றிலிருந்து நீர்வரத்தாலும் பெருகியுள்ளது. ஆனால் இக்குளத்து நீரை பயன்படுத்த முடியாமல் மக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் முகம் சுழிக்கின்றனர்.
குளத்தைச் சுற்றிலும் நடைபாதைகளில் கொட்டப்படும் குப்பைகளால், கழிவு பொருட்களால் அப்பகுதி மாசடைந்து வருகிறது. மேலும் முள்மரங்கள், புதர் நிறைந்து சுகாதாரக்கேடாக உள்ளதால் அப்பகுதியில் மக்கள் நடமாட தயங்குகின்றனர். மேலும் தெற்குபுறம் உள்ள கழிப்பறை தொட்டி நிரம்பி மழை பெய்தால் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது.
சுற்றுலாத்தலமான இங்கு தெற்குப்புற சிமென்ட் ரோடு பழுதடைந்துள்ளதை புதுப்பிக்கவும், குளத்தைச் சுற்றிலும் குப்பையை அகற்றவும் பக்தர்கள் கோரியுள்ளனர். மேலும் குளத்தை சுற்றிலும் குப்பை கொட்ட தடை செய்யவும், உடைந்த படித்துறைகளை சீரமைக்கவும், சிமென்ட் இருக்கை அமைக்கவும் கோரியுள்ளனர்.

