/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்பாரம் சீரமைப்பு பணி தெற்கு ரயில்வே திட்டம்
/
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்பாரம் சீரமைப்பு பணி தெற்கு ரயில்வே திட்டம்
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்பாரம் சீரமைப்பு பணி தெற்கு ரயில்வே திட்டம்
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்பாரம் சீரமைப்பு பணி தெற்கு ரயில்வே திட்டம்
ADDED : டிச 17, 2025 05:38 AM

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் முதல் பிளாட்பாரம், கூரையில் உள்ள பழைய ஆஸ்பெஸ்டாஸ் சீட் மாற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் வழியாக ராமேஸ்வரம் - சென்னை, வாரணாசி மற்றும் வேளாங்கண்ணிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் அரசு அலுவலகங்கள் சென்று வரும் அலுவலர்களின் வசதிக்காக பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வ கட்சியினர், ரயில் பயணிகள் சங்கத்தினர் தெற்கு ரயில்வே மேலாளரிடம் வலியுறுத்தினர்.
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் 'லிப்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் பிளாட்பாரத்தில் அமைத்துள்ள தளத்தை அகற்றி, புதிதாக கற்கள் பதித்து முதல் பிளாட்பாரத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது போன்று பிளாட்பார கூரையில் உள்ள பழைய ஆஸ்பெஸ்டாஸ் சீட்களை அகற்றிவிட்டு, புதிதாக சீட் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
தற்போது சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் 3 பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளன.
அதில் ஒரு பிளாட்பாரத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் இன்ஜின் நிறுத்தப்படுகிறது.
இதனால் ரயில்கள் கிராசிங் போட, 2 பிளாட்பாரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்கும் நோக்கில் 3 பிளாட்பாரங்களையும் பயன்படுத்தும் வகையில், தண்டவாளத்தை சீரமைக்கும் இன்ஜின்களை நிறுத்துவதற்காக மட்டுமே தனியாக ஒரு பிளாட்பாரம் அமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

