/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் மழை பெய்தும் ஊருணிக்கு சென்று சேரவில்லை
/
தேவகோட்டையில் மழை பெய்தும் ஊருணிக்கு சென்று சேரவில்லை
தேவகோட்டையில் மழை பெய்தும் ஊருணிக்கு சென்று சேரவில்லை
தேவகோட்டையில் மழை பெய்தும் ஊருணிக்கு சென்று சேரவில்லை
ADDED : அக் 07, 2024 05:10 AM

தேவகோட்டை: தேவகோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டி வதைத்தது . நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே சென்றது. 10 அடியில் இருந்து 18 அடி வரை நிலத்தடி நீர் கீழே சென்றது. இந்நிலையில் கடந்த வாரம் அதிகாலையில் இடைவெளியின்றி 3:00 மணி நேரம் மழை கொட்டியது.
மழை தண்ணீர் எல்லாம் ரோடுகளில் வெள்ளமாக ஓடி வீணானது. நகரில் உள்ள கண்மாய், ஊருணிகளுக்கு மழை நீர் சென்று சேரவில்லை. இந்த சூழலில் மீண்டும் கடந்த மூன்று தினங்களாக பகலிலும், இரவிலும் பலத்த இடி, காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சுமார் 20 செ.மீ., க்கு மேல் மழை பெய்துள்ளது. ஆனால் தேவகோட்டையில் உள்ள ஊருணி அனைத்திலும் தண்ணீர் முழுமையாக சேகரமாகவில்லை. வரத்து கால்வாய் அடைபட்டு போனதால், மழை நீர் தேங்கி கிடக்கிறது. நகரில் உள்ள 18 ஊருணிகளில் ஓரிரு ஊருணிகளை தவிர மற்ற ஊருணி படித்துறைகள் கூட செடிகள், குப்பைகள் மண்டிக்கிடக்கிறது. வள்ளி விநாயகர் கோவிலுக்கு எதிர் புறம் உள்ள ஊருணிக்கு ராம்நகர், காரைக்குடி செல்லும் ரோட்டில் உள்ள மழைநீர் மூன்று பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவு இந்த ஊருணிக்கு வரவேண்டும்.
இந்த ஊருணி தண்ணீர் ஒரு காலத்தில் குடிநீர் ஊருணியாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஊருணியில் தண்ணீர் வரத்தின்றி, கழிவு நீராக காட்சி அளிக்கிறது. எனவே நகரில் உள்ள 18 ஊருணிகளை துார்வாரி, மழை நீர் செல்லம் வகையில் வரத்து கால்வாய்களை துார்வாரி அடுத்து வரும் மழைக்காலங்களில் மழை நீர் முழுமையாக ஊருணிக்குள் சேகரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

