/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் அறிக்கைக்கு கோரிக்கை பெட்டி
/
தேர்தல் அறிக்கைக்கு கோரிக்கை பெட்டி
ADDED : மார் 14, 2024 03:56 AM
சிவகங்கை: பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் குறை கேட்கும் பெட்டி காளையார்கோவிலில் நிறுவப்பட்டது.
பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிக்க ஏதுவாக கிராமம் தோறும் புகார் பெட்டி வைத்து, அதில் பொதுமக்கள் அளிக்கும் புகார், கோரிக்கையின் அடிப்படையில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வதற்கானமுயற்சியாக, நேற்று காளையார்கோவிலில் பா.ஜ., சார்பில் தேர்தல்அறிக்கை தயாரிப்பு முன் யோசனை பெட்டி வைக்கப்பட்டது.
காளையார்கோவில் வடக்கு ஒன்றிய தலைவர்பில்லப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய பொது செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தார். மாநில வர்த்தக பிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பழனிக்குமார், கிளை தலைவர்கள் தனபால், வீரமணி, செந்தில்குமார்,கார்த்திகேயன் பங்கேற்றனர்.

