/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் பள்ளி முன் நாய்கள் : மாணவ, மாணவியர் அச்சம்
/
கீழடியில் பள்ளி முன் நாய்கள் : மாணவ, மாணவியர் அச்சம்
கீழடியில் பள்ளி முன் நாய்கள் : மாணவ, மாணவியர் அச்சம்
கீழடியில் பள்ளி முன் நாய்கள் : மாணவ, மாணவியர் அச்சம்
UPDATED : டிச 18, 2025 09:14 AM
ADDED : டிச 18, 2025 05:41 AM

கீழடி: கீழடியில் அரசு பள்ளி முன் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால் மாணவ, மாணவியர் அச்சத்துடன் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது நாய்கடியால் சிறுவர், சிறுமியர் அதிகளவில் பாதிக்கப்படுவதை அடுத்து பள்ளி கல்வி துறை பள்ளிகள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்டவற்றிற்கு நாய்கள் வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும், மாணவ, மாணவியர்கள் தெரு நாய்களுக்கு உணவளிப்பது, அவற்றுடன் நெருங்கி பழகுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் என அறிவித்திருந்தது.
ஆனால் கிராமப்புறங்களில் பள்ளி வளாகத்திலேயே நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. பள்ளி தொடங்கும் நேரம், முடிவடையும் நேரங்களில் வாசலில் நிற்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பள்ளி வளாகங்களில் மீதமாகும் உணவுகளை கொட்ட குப்பைத் தொட்டி வைப்பதை கட்டாயமாக்க வேண்டும், அதனை தினசரி அகற்ற வேண்டும்.
கீழடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாசலில் கூட்டம் கூட்டமாக நாய்கள் நின்றதால் மாணவ, மாணவியர்கள் பள்ளி செல்ல அச்சமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர்.

