/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீபாவளி மளிகை தொகுப்பு ஏமாற்றம்; 'பேக்கிங்' செய்வதில் தாமதம்
/
தீபாவளி மளிகை தொகுப்பு ஏமாற்றம்; 'பேக்கிங்' செய்வதில் தாமதம்
தீபாவளி மளிகை தொகுப்பு ஏமாற்றம்; 'பேக்கிங்' செய்வதில் தாமதம்
தீபாவளி மளிகை தொகுப்பு ஏமாற்றம்; 'பேக்கிங்' செய்வதில் தாமதம்
ADDED : அக் 29, 2024 07:02 AM
சிவகங்கை: தமிழகத்தில் சென்னையை தாண்டாத கூட்டுறவு தீபாவளி சிறப்பு மளிகை தொகுப்பு திட்டத்தால், பிற மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் அந்தந்த மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் அக்., 28 முதல் தீபாவளி சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தனர். ரூ.299க்கு (எலைட் பேக்) துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு, வத்தல் தலா 250 கிராம், வறுகடலை, தனியா தலா 200 கிராம், புளி, ரவை தலா 100 கிராம், மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, சோம்பு தலா 50 கிராம், ஏலக்காய் 5 கிராம் வீதம் வழங்கப்படும். அதே போன்று ரூ.199 க்கான (பிரீமியம் பேக்) துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு தலா 200 கிராம், ரவை 150 கிராம், வறுகடலை, வத்தல், தனியா, புளி தலா 100 கிராம், வெந்தயம், கடுகு, சோம்பு தலா 50 கிராம், மிளகு, சீரகம் தலா 25 கிராம், ஏலக்காய் 5 கிராம் வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நேற்று சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள மொத்த விற்பனை பண்டக சாலைக்கு மளிகை தொகுப்பு பொருட்கள் வராததாலும், அவற்றை பேக்கிங் செய்ய ஆட்கள் இல்லாததால், கூட்டுறவு துறை அறிவித்த தீபாவளி மளிகை தொகுப்பு வினியோகம் செய்யவில்லை. இதனால், மளிகை தொகுப்பு கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கூட்டுறவுதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் திடீர் அறிவிப்பால், மளிகை பொருட்கள் காலதாமதமாக மாவட்டங்களுக்கு வந்துள்ளது. அவற்றை பேக்கிங்' செய்த பின் அந்தந்த மொத்த விற்பனை பண்டக சாலையில் வைத்து வினியோகம் செய்யப்படும், என்றார்.

