/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஸ்கேன் எடுக்க காத்திருப்பு ரேடியாலஜிஸ்ட் இன்றி சிரமம்
/
சிவகங்கையில் ஸ்கேன் எடுக்க காத்திருப்பு ரேடியாலஜிஸ்ட் இன்றி சிரமம்
சிவகங்கையில் ஸ்கேன் எடுக்க காத்திருப்பு ரேடியாலஜிஸ்ட் இன்றி சிரமம்
சிவகங்கையில் ஸ்கேன் எடுக்க காத்திருப்பு ரேடியாலஜிஸ்ட் இன்றி சிரமம்
ADDED : பிப் 28, 2024 05:42 AM
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க நோயாளிகள் வார கணக்கில் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இங்கு, கர்ப்பிணிகள் வயிற்று வலி பிரச்னை, குடல் வால்வு, சிறுநீர்ப்பை, மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை பாதிப்பு சிகிச்சைக்காக தினமும் 60 பேர் வரை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வருகின்றனர்.
மாவட்ட அளவில் உள்ள தாலுகா மருத்துவமனைகளில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க டாக்டர்களின்றி சிவகங்கை மருத்துவ கல்லுாரிக்கு பரிந்துரை செய்கின்றனர். காரைக்குடி அரசு மருத்துவமனையில் மட்டுமே ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் 4 ஸ்கேன்கள் உள்ளன.
உள்நோயாளியாக இருந்தால், ஓரிரு நாட்களில் ஸ்கேன் எடுக்கின்றனர். புற நோயாளியாக வந்தால் தேதி ஒதுக்கீடு செய்கின்றனர். ஸ்கேன் எடுப்பதற்காக நோயாளிகள் 10 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சிவகங்கை மருத்துவமனை ரேடியாலஜி பிரிவில் 5 பேர் இருந்த இடத்தில், 3 பேர் மட்டுமே உள்ளனர்.
அதிலும் சிலர் விடுப்பில் சென்று விடுவதால், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க முடியாமல் நோயாளிகள் பல நாட்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது.
இதற்கு மருத்துவமனை நிர்வாகம் தீர்வு காண வேண்டும். இங்கு வரும் ஏழை, நடுத்தர குடும்ப நோயாளிகளை தனியார் ஸ்கேன் சென்டருக்கு செல்லுமாறு வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ரேடியாலஜி துறை பொறுப்பாளர் பாலமுருகன் கூறியதாவது, இங்கு 3 ரேடியாலஜிஸ்ட் மட்டுமே உள்ளனர்.
தினமும் 60 பேர் வரை வருகின்றனர். கர்ப்பிணி, அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு உடனுக்குடன் ஸ்கேன் எடுக்கிறோம். இங்கு 5 ரேடியாலஜிஸ்ட் பணியிடத்தை நிரப்ப வேண்டும், என்றார்.

