/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தெற்கு சமுத்திரத்தில் சேதமான ரோடு
/
தெற்கு சமுத்திரத்தில் சேதமான ரோடு
ADDED : டிச 15, 2025 06:04 AM

சாலைக்கிராமம்: இளையான்குடி அருகே தெற்கு சமுத்திரத்திலிருந்து வட்டாயுதமுடைய அய்யனார் கோயில் வழியாக சாலைக்கிராமம் செல்லும் ரோடு மிகவும் சேதமடைந்து இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி அருகே தெற்கு சமுத்திரத்தில் இருந்து அய்யனார் கோயில் வழியாக சாலைக்கிராமத்திற்கு ரோடு போட்டு 15 ஆண்டுக்கும் மேலானது.
தொடர்ந்து பராமரிப்பின்றி இந்த ரோடு குண்டும்,குழியுமாக கற்கள் பெயர்ந்து மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அய்யனார் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிற நிலையில் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் வேன்களில் வரும்போது ரோடு மிகவும் மோசமாக இருப்பதினால் அடிக்கடி அவர்கள் வரும் வாகனங்களும் பழுதாகி வருகிறது.
இந்த ரோட்டை ஒட்டியுள்ள வயல்வெளிகளுக்கு தேவையான உரம் மற்றும் இடு பொருட்களையும் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

