/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீட்டில் 15 பவுன் திருட்டு தம்பதி கைது
/
வீட்டில் 15 பவுன் திருட்டு தம்பதி கைது
ADDED : ஏப் 12, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி:சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டி குணசேகரன். இவர் மார்ச் 27 ல் வெளியூர் சென்றுள்ளார். அன்று இரவு இவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.40 ஆயிரம், வெள்ளிபொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
குற்றப்பிரிவு எஸ்.ஐ., சக்திவேல் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் விசாரித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை கரிமேட்டை சேர்ந்த ராமு 47, அவரது மனைவி நாடாத்தி லதா 42, ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 80 கிராம் தங்க கட்டி, கார், டூவீலரை பறிமுதல் செய்தனர். மேல்விசாரணை நடக்கிறது.
-

