/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை வேட்பாளர் யார் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பம்
/
சிவகங்கை வேட்பாளர் யார் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பம்
சிவகங்கை வேட்பாளர் யார் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பம்
சிவகங்கை வேட்பாளர் யார் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பம்
ADDED : மார் 14, 2024 03:41 AM
சிவகங்கை: சிவகங்கையில் தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கு எதிராக, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதில், குழப்ப நிலை நீடித்து வருகிறது.
தி.மு.க., - காங்., கூட்டணியில் காங்.,க்கு சிவகங்கை ஒதுக்கப்படும் நிலையில் மீண்டும் கார்த்தி எம்.பி., போட்டியிடலாம். இவருக்கு எதிராக சிறந்த வேட்பாளரை களம் காண செய்வதில், பா.ஜ., கூட்டணி மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., கூட்டணியில் இங்கு போட்டியிட பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்., அசோகன் கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே போன்றுஅ.தி.மு.க.,வில் ஒன்றிய செயலாளர்கள் சேவியர்தாஸ், கோபி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன்பெயர்களும் அடிபடுகிறது. இவ்விரு கூட்டணி கட்சியிலும் ஒரே சமுதாயத்தினர் தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.இதனால், ஓட்டுக்கள் பிரிந்து, இத்தேர்தலில் சிவகங்கை தொகுதி மீண்டும் தி.மு.க., - காங்., கூட் டணிக்கு சாதகமாக சென்றுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
முதலில் பா.ஜ., கூட்டணியில் தினகரன் போட்டியிடுவார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால், அவர் தேனியில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 2019 ல் அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்டு 1 லட்சத்து 22 ஆயிரத்து 534 ஓட்டுக்களை பெற்ற மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டிக்கு மீண்டும் வாய்ப்பு தருவதா என்ற பேச்சும் அடிபடுகிறது.
ஒரே சமுதாயத்தினரை களத்தில் இறக்கி காங்., வெற்றிக்கு துணைபோய்விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர்.இதனால், வி.ஐ.பி., அந்தஸ்து பெற்ற சிவகங்கை தொகுதியில் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கூட்டணி திணறி வருகிறது.

