/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் புதிய தார் ரோடு ஜல்லி பெயர்ந்து வருவதாக புகார்
/
மானாமதுரையில் புதிய தார் ரோடு ஜல்லி பெயர்ந்து வருவதாக புகார்
மானாமதுரையில் புதிய தார் ரோடு ஜல்லி பெயர்ந்து வருவதாக புகார்
மானாமதுரையில் புதிய தார் ரோடு ஜல்லி பெயர்ந்து வருவதாக புகார்
ADDED : டிச 14, 2025 06:23 AM

மானாமதுரை: மானாமதுரையில் புதிதாக போடப்பட்டுள்ள தார்ரோட்டில் ஜல்லி பெயர்ந்து வருவதால் இப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மானாமதுரை நகராட்சி 10வது வார்டில் அரசு மருத்துவமனை அருகே சங்கு பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் ரோட்டில் நேற்று புதியதாக தார் ரோடு போடப்பட்டது. ரோட்டை கிளறி போடாமல் அப்படியே ரோடு போடப்பட்டதால் சில மணி நேரங்களிலேயே ஜல்லி பெயர்ந்து வருகிறது.
கவுன்சிலர் நமகோடி கூறியதாவது:
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போடப்படும் தார் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனது வார்டுக்குட்பட்ட பகுதியிலும் தார் ரோடு போட்டு வருகின்றனர்.
இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் முறையான பதில் கூறாமல் அலட்சியம் செய்கிறார். நகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
அரசு மருத்துவமனை அருகே போடப்பட்ட தார் ரோடு தரமற்ற இருப்பதாக புகார் வந்ததை அடுத்து உடனடியாக சென்று பார்வையிட்ட பிறகு நகராட்சி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை வரவழைத்து கேட்டபோது தார் கலவையில் குறைபாடு உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து அவர்களை எச்சரித்து உடனடியாக அதனை அகற்றி விட்டு புதிதாக ரோடு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

