/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழந்தைகள் கடத்தலை தடுக்க சென்சார் கருவி; முழுமையாக செயல்படாததால் கலெக்டர் அதிர்ச்சி
/
குழந்தைகள் கடத்தலை தடுக்க சென்சார் கருவி; முழுமையாக செயல்படாததால் கலெக்டர் அதிர்ச்சி
குழந்தைகள் கடத்தலை தடுக்க சென்சார் கருவி; முழுமையாக செயல்படாததால் கலெக்டர் அதிர்ச்சி
குழந்தைகள் கடத்தலை தடுக்க சென்சார் கருவி; முழுமையாக செயல்படாததால் கலெக்டர் அதிர்ச்சி
ADDED : ஜூலை 24, 2025 06:40 AM

சிவகங்கை : சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் குழந்தைகளுக்கான வார்டில் குழந்தைகள் கடத்தலை தடுக்க பொருத்தப்பட்ட சென்சார் கருவி தாமதமாக செயல்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கலெக்டரிடம் சர்வர் பிரச்னையால் செயல்பாட்டில் தாமதம் ஏற்பட்டதாக கூறி டாக்டர்கள் சமாளித்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தனது உறவினர் சிகிச்சை பெறுவதை பார்க்க வந்த கலெக்டர் பொற்கொடி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.தாய் வார்டு, மப்பேறு மருத்துவ பிரிவு, அறுவை அரங்கு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு செய்தார். முதல்வர் சத்தியபாமா, துணை முதல்வர் விசாலாட்சி,மருத்துவ கண்காணிப்பாளர் தங்கதுரை, துணை நிலைய மருத்துவர் முகமது ரபி,தென்றல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தாய்வார்டு, மப்பேறு பிரிவில் ஆய்வு செய்த கலெக்டர் நோயாளிகள்,கர்ப்பிணிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மகப்பேறு பிரிவில் குழந்தைகளை வார்டில் இருந்து யாராவது தெரியாமல் வெளியே எடுத்து செல்லும் போது அதை அறிவதற்காக சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை அறிய விரும்பிய கலெக்டர் பெண் ஒருவரிடம் குழந்தை ஒன்றை துாக்கி கொண்டு இந்த இடத்தை கடந்து செல்லுமாறு கூறி ஆய்வு செய்தார்.
ஆனால் அந்த பெண் கடந்த சில நிமிடம் கழித்தே ஒலி வந்ததால் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு டாக்டர்கள் சர்வர் பிரச்னையால் தாமதமாக ஒலி வருவதாக தெரிவித்தனர்.மேலும் நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை உறவினர்களிடமே கொடுத்து அங்குள்ள பரிசோதனை மையத்தில் கொடுத்து முடிவுகளை பெற்று வர டாக்டர்கள் கூறுவதாகவும்,நோயாளிகளின் உறவினர்களிடம் அடிக்கடி ரத்த மாதிரிகளை கொடுத்து பரிசோதனை முடிவுகளை வாங்கி வருமாறு கூறுவதால் நோயாளிகள் சிரமம்படுவதாக கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
டாக்டர்கள் கூறுகையில், அவசர ரத்த பரிசோதனைக்கு மட்டுமே உறவினர்களிடம் கொடுத்து அனுப்புவதாகவும், மற்ற நேரங்களில் பயிற்சி மருத்துவர்களே அந்த பணியை செய்வதாக தெரிவித்தனர்.

