ADDED : நவ 28, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் அரசு பஸ் மோதியதில் துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.
மணலுாரைச் சேர்ந்த மாரி மனைவி செல்வி 46, மதுரை தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப் வந்த போது அந்த வழியாக மதுரை சென்ற அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்

