ADDED : பிப் 08, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை ரெகுநாதபுரம் கைலாசநாதபுரம் சந்திப்பில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலில் விளக்கை அகற்றிவிட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற நபர் இரண்டு உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார்.
கேமராவில் சரியாக பதிவாக வில்லை. நேற்று காலை வழக்கம் போல பூஜாரி கோயிலுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், உள்ளே உண்டியல் உடைத்து இருப்பதை பார்த்து போலீசில் புகார் செய்தார்.

