ADDED : செப் 30, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி மற்றும் மானாமதுரை நகராட்சி இணைந்து நடத்திய தூய்மையே எனது பழக்கம், தூய்மையே எனது வழக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி, முதல்வர் சாரதா, துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். மாணவர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வை வில்லுப்பாட்டு, பேச்சு, மாறுவேடம், ஓவிய போட்டி மூலம் வெளிப்படுத்தினர்.

