ADDED : ஜன 14, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை விழாவை முன்னிட்டு ஒரு வாரம் கோவிலில் உள்ள நடராஜருக்கும், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் கோ பூஜை நடைபெற்றது. சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து நடராஜருக்கும் , சிவகாமி அம்மனுக்கும், மாணிக்கவாசகருக்கும் பூஜைகள் நடைபெற்றன. 11 ஆயிரம் ருத்ராட்சத்தால் ஆன கேடகத்தில் நடராஜரும், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் திருவீதி உலா வந்தனர்.
* நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவிலில் கோ பூஜை, ருத்ர சமுக்க ஹோமம் பாராயணம் பாடி சிதம்பரேஸ்வரர் சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகருக்கு அபிஷேகம் நடந்தது.

