sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அ.தி.மு.க., கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நிர்வாகிகள் பேச்சு மூத்த நிர்வாகி கேள்வியால் வாக்குவாதம்

/

அ.தி.மு.க., கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நிர்வாகிகள் பேச்சு மூத்த நிர்வாகி கேள்வியால் வாக்குவாதம்

அ.தி.மு.க., கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நிர்வாகிகள் பேச்சு மூத்த நிர்வாகி கேள்வியால் வாக்குவாதம்

அ.தி.மு.க., கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நிர்வாகிகள் பேச்சு மூத்த நிர்வாகி கேள்வியால் வாக்குவாதம்


ADDED : நவ 20, 2024 02:39 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கையில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அ.ம.மு.க.,தலைவர் தினகரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசப்பட்டது. தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகங்கையில் அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி. ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன் பேசுகையில், தென் மாவட்டங்களில் தி.மு.க., அசுர பலத்துடன் இருக்கிறது. அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும். முக்குலத்தோர் சமுதாய தலைவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். முக்குலத்தோர் சமுதாயத்தை ஈர்க்கக்கூடிய தலைவர்களை அ.தி.மு.க.,வில் உருவாக்க வேண்டும் என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில், அ.தி.மு.க.,வில் முக்குலத்தோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

திருச்சியில் இருந்து தென் மாவட்டங்களில் 50 மாவட்ட செயலாளர்கள் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர்களில் 90 சதவீதம் அந்த சமுதாயத்தினர் தான் உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வமும், தினகரனும் தான் இந்த கட்சிக்காக உழைத்தார்களா, வேறு யாரும் இல்லையா. அவர்களுக்கு இனிமேல் இந்த கட்சியில் இடம் கிடையாது என்றார்.

செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பேசுகையில், அ.தி.மு.க., என்ற கட்சியை அனைத்து சமுதாய மக்களுக்காகவும் தான் எம்.ஜி.ஆர்., உருவாக்கினார். அதைத்தான் பழனிசாமியும் கடைப்பிடித்து வருகிறார். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற கட்சி தொண்டர்களை சேர்க்க முயற்சி செய்வோம் என்றார்.

நிர்வாகிகள் மோதல்


மாநில எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் உமாதேவன் பேசியது: எம்.ஜி.ஆரின் மீதான விசுவாசத்தால் இந்த இயக்கத்திற்கு வந்தவன். கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. 2001ல் நான் சில பேர் காலில் விழுந்திருந்தால் அமைச்சராகி இருக்கலாம். இந்த கூட்டம் நடப்பது குறித்து எனக்கு தெரியாது என்று பேசிக் கொண்டிருந்த போது மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு குறுக்கிட்டு பேசினார்.

அப்போது உமாதேவனுக்கும் பிரபுவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அமர வைத்தனர். இதனால் கூட்டத்தில் 15 நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது.

மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பதிலளித்து பேசுகையில், நீங்கள் மூத்த நிர்வாகி. நான் உங்களோடு பணியாற்றி வந்தவன். என்னை கண்டிப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. இரண்டு முறை போனில் அழைத்தேன். உங்களது போன் நாட் ரீச்சபிள் என வந்தது. உங்களது மகனுக்கு போன் செய்து கூட்டத்திற்கு வருமாறு தகவல் சொன்னேன் என்று கூறி தனது செல்போனை காண்பித்தார்.

பின்னர் கூட்டத்தில அமைதி ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us