/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தடுப்புச் சுவர் இல்லாததால் தினந்தோறும் விபத்து
/
மானாமதுரையில் தடுப்புச் சுவர் இல்லாததால் தினந்தோறும் விபத்து
மானாமதுரையில் தடுப்புச் சுவர் இல்லாததால் தினந்தோறும் விபத்து
மானாமதுரையில் தடுப்புச் சுவர் இல்லாததால் தினந்தோறும் விபத்து
ADDED : மே 02, 2025 06:23 AM

மானாமதுரை: மானாமதுரையில் இருந்து அன்னவாசல் செல்லும் ரோட்டில் உள்ள மேலப்பசலை கால்வாயில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
மானாமதுரையில் இருந்து அன்னவாசல் செல்லும் ரோடு அமைக்கப்பட்டு 15 வருடங்களுக்கும் மேலானதால் மிகவும் மோசமாக நிலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ரோடு புதுப்பிக்கப்பட்டது.
ஆனால் மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் இருந்து அன்னவாசல் ரோடு பிரியும் இடத்தில் மேலப்பசலை கால்வாய் செல்லும் இடத்தில் தடுப்புச் சுவர் கட்டாமல் இருப்பதால் இப்பகுதியில் ரோட்டை ஒட்டிய கால்வாயில் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர்.
மேலும் கால்வாயை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்களும் கால்வாய் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். ஆகவே இந்த ரோட்டை புதுப்பிக்கும் போது இக்கால்வாயை ஒட்டி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் ரோட்டை மட்டும் புதுப்பித்து விட்டு தடுப்புச் சுவர் கட்டாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

