/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் விரட்டி கடித்த வண்டு
/
மானாமதுரையில் விரட்டி கடித்த வண்டு
ADDED : டிச 21, 2024 06:08 AM
மானாமதுரை : மானாமதுரை அண்ணாதுரை சிலை எதிரே வைகை ஆற்றில் மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தின் வழியாக மானாமதுரை மேல்கரையில் இருந்து சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் நகர் பகுதியிலிருந்து ஆற்றுக்குள் மக்கள் செல்ல முடியாமல் இந்த மேம்பாலத்தின் வழியாகத்தான் அனைவரும் சென்று வருகின்றனர்.
மேம்பாலத்திற்கு கீழ்புறம் வண்டுகள் கூடுகட்டி இருந்த நிலையில் நேற்று மேம்பாலத்தில் தி.மு.க.,வினர் கட்சி நிகழ்ச்சிக்காக கட்டிய கொடிகளை அகற்றினர்.
அப்போது கூட்டில் இருந்து வண்டுகள் பறந்து வந்து அவ்வழியாக வந்தவர்களை கடித்ததால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
பாலத்தில் கட்டப்பட்டுள்ள வண்டு கூடுகளை அகற்ற வேண்டும்.

