/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
3000 கிலோ ரேஷன் அரிசி சிங்கம்புணரியில் பறிமுதல்
/
3000 கிலோ ரேஷன் அரிசி சிங்கம்புணரியில் பறிமுதல்
ADDED : டிச 17, 2024 04:00 AM

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் தினமும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்துள்ளது.
டிச.15ம் தேதி அதிகாரிகள், போலீசார் மேலூர் ரோட்டில் நாட்டார்மங்கலம் அருகே ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேங்கைப்பட்டியை சேர்ந்த குமரேசன் மகன் தினேஷ்குமார் என்பவர் டூவீலரில் 350 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசியை நான்கு மூடையில் கடத்திச் வந்தது தெரிந்தது.
அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் வேங்கைப்பட்டியில் உள்ள கேசவன் வீட்டிலும் சோதனை செய்தனர். அங்கு 2800 கிலோ எடையுள்ள 40 ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
அவற்றையும் பறிமுதல்செய்த அதிகாரிகள் கேசவன், தினேஷ்குமார் இருவரும் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

