ADDED : ஏப் 12, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை அருகே காரைபுதுக்கோட்டை சரண்யா 40. இவரது மகள் காவியா 13, உறவினர் மகள் சாருமதி 17 ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் நல்லாங்குடி கோயில் திருவிழா சென்று டூவீலரில் கிராமத்திற்கு திரும்பினர்.
தச்சவயல் பொட்டல் குடியிருப்பு அருகே அறுந்து கிடந்த மின்கம்பி மீது டூவீலர் ஏறியதும், நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் 3 பேரும் காயமுற்றனர். தேவகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

