/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
/
சிங்கம்புணரியில் 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
சிங்கம்புணரியில் 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
சிங்கம்புணரியில் 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
ADDED : டிச 25, 2025 05:30 AM
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து, 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.
சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரில் டிச.,23 இரவு சாமிக்கண்ணு என்பவரது வீட்டு கதவை உடைத்து, பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அன்று இரவே மாதவன் வீட்டில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை மாற்றி வைத்துவிட்டு, அவரது வீட்டில் பணம், நகை எங்கு இருக்கிறது என கண்டறியமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழப்பூங்குடி உடையார் மனைவி கலாராணி 37. நவ., 16ல் பூட்டியிருந்த இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 4 பவுன் செயின், 3 கிராம் தங்க டாலர், வெள்ளி செயின், மோதிரம் உட்பட 4 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்றார். போலீசார் அலங்கான்பட்டி சரத்குமார் 30,யை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

