/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூட்டிய வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது
/
பூட்டிய வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது
பூட்டிய வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது
பூட்டிய வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது
ADDED : நவ 30, 2024 06:37 AM
திருக்கோஷ்டியூர்; திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கத்தில் பூட்டிய வீட்டில் தங்க,வெள்ளி,வைர நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடியில் வசிக்கும் கந்தசாமி மகன் சிதம்பரம் கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கத்தில் உள்ள பராம்பரிய வீட்டில் தீபாவளி நேரத்தில் வைர, தங்க, வெள்ளி நகை கொள்ளை போனது. இவ்வழக்கில் தனிப்படை போலீசார் விசாரித்ததில் முதற் கட்டமாக தேனியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சோனி ராஜா 58.
மதுரை செக்கானுாரணியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் அழகர்சாமி 35 ஆகியோரைக் கைது செய்து 43 பவுன் தங்கம், 15 கிலோ வெள்ளி நகைகளை மீட்டனர்.
விசாரணையில் மேலும் இருவர் சம்பந்தப்பட்டிருந்தது தெரிந்தது. நேற்று போலீசார் இருவரையும் கைது செய்தனர். கொள்ளையில் தொடர்புள்ள பைசு என்ற சேட்டன் 50 மற்றும் மதுரை விலாங்குளம் கார்த்திக் பாண்டியன் 35 ஆகியோரைக் கைது செய்தனர்.
இதில் சோனிராஜாவும், பைசு என்ற சேட்டனும் வீட்டில் கொள்ளையடித்தவர்கள். மற்ற இருவரும் பொருட்களை விற்க, கார்களை ஓட்டிச் செல்ல உதவுபவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

