/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 93 பயனாளிக்கு ரூ.19 லட்சம் நலத்திட்டம்
/
சிவகங்கையில் 93 பயனாளிக்கு ரூ.19 லட்சம் நலத்திட்டம்
சிவகங்கையில் 93 பயனாளிக்கு ரூ.19 லட்சம் நலத்திட்டம்
சிவகங்கையில் 93 பயனாளிக்கு ரூ.19 லட்சம் நலத்திட்டம்
ADDED : செப் 26, 2024 04:54 AM
சிவகங்கை: சிறுபான்மையினர் நிதியில் சிவகங்கையை சேர்ந்த 93 பயனாளிக்கு ரூ.19 லட்சம் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா வழங்கினார்.
சிவகங்கையில் பிற்பட்டோர், சிறுபான்மையினர் நல துறையின் மூலம் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி வரவேற்றார்.
மாங்குடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கு பாதிரியார்கள், இஸ்லாமிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா பேசியதாவது: 15 ஆண்டிற்கு மேல் உள்ள சர்ச், மசூதிகளை புதுப்பிக்க அரசு ரூ.15 லட்சம் வரை நிதி உதவி அளிக்கிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பொருளாதார மேம்பாட்டு கடனாக ரூ.100 கோடி வரை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். கல்வி உதவி தொகையும் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம், என்றார். கூட்டத்தில் 74 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

