/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் கோயில் திசையில் பொங்கல் வைத்த பெண்கள்
/
தாயமங்கலம் கோயில் திசையில் பொங்கல் வைத்த பெண்கள்
ADDED : ஏப் 04, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்து வருகிறது. இதே நாளன்று சுற்றியுள்ள பகுதி மக்கள் தாயமங்கலம் கோயில் அமைந்துள்ள திசையைநோக்கி பொங்கல் வைப்பர்.
பக்தர்கள் சிலர் கூறுகையில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா அன்று கோயிலில் அதிகளவு கூட்டம் இருக்கும் என்பதால் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபடுவது விசேஷமாகும். வருடம் தோறும் தொடர்ந்து செய்து வருவதோடு உறவினர்களையும் அழைத்து பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறோம் என்றனர்.

