/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உரிமை தொகை கேட்டு குவிந்த பெண்கள்
/
உரிமை தொகை கேட்டு குவிந்த பெண்கள்
ADDED : ஆக 20, 2024 07:07 AM
தேவகோட்டை, : தேவகோட்டை வட்டாரத்தில் புளியால், உஞ்சனையில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், மகளிர் உரிமை தொகை கேட்டு ஏராளமான பெண்கள் மனுக்களுடன் குவிந்தனர்.
இக்கூட்டத்திற்கு காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி சிறப்பு வகித்தார். தாசில்தார் சேதுநம்பு தலைமை வகித்தார்.
மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் சரவணமெய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் புளியால் மிக்கேல்ராஜ், உஞ்சனை அருணகிரி, வெங்களூர் அண்ணாத்துரை, உதவி பி.டி.ஓ., முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமிற்கு வந்த மனுக்களில் பெரும்பாலும் மகளிர் உரிமை தொகை கேட்டு ஏராளமான பெண்கள் மனு அளித்திருந்தனர். முன்னாள் மாணவர்கள் சிலர் அரசு உயர்நிலை பள்ளிக்கு ரோடு, சுற்றுச்சுவர், குடிநீர் வசதி செய்து தரக்கோரி மனு அளித்தனர்.

