/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் திருத்தளிநாதர்கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
/
திருப்புத்துார் திருத்தளிநாதர்கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருப்புத்துார் திருத்தளிநாதர்கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருப்புத்துார் திருத்தளிநாதர்கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED : மே 14, 2024 12:07 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைசேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். நேற்றுமுன்தினம் இரவு 6:30 மணிக்கு யாக பூஜை நடந்து அம்மன் சன்னதியில் வில்வமரத்திற்கு காப்புக்கட்டப்பட்டது.
நேற்று அதிகாலை 5:30 மணிக்கு திருத்தளிநாதர் சிவகாமியம்மன், வள்ளியுடன் தெய்வானை, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்,விநாயகர் ஆகியோர் அலங்காரத்தில் கொடி மரம் அருகில் எழுந்தருளினர். கொடி மரம் முன் அஸ்திரத்தேவரும் எழுந்தருளினார்.
யாகசாலை கலச பூஜை நிறைவடைந்து கொடி மரத்திற்கு 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிவாச்சார்யர்களால் வேதமந்திரங்கள் முழங்க காலை 6:40 மணிக்கு நந்தீஸ்வரர் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் கொடி மரத்தில் தர்ப்பை புல், மாவிலை, மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சிவாச்சார்யருக்கும், கொடிமரத்திற்கும் காப்புக் கட்டி விழா துவங்கியது.
இரவு 8:00 மணிக்கு உற்ஸவ திருத்தளிநாதரும், சிவகாமி அம்பாளும் சூரிய பிறை, சந்திர பிறைகளில் எழுந்தருளுவர். தொடர்ந்து நாயுடு மகாஜன சங்கம் சார்பில் மண்டபகப்படி தீபாராதனை நடைபெறும்.
பின் சுவாமியும், அம்பாளும் திருவீதி வலம் வருவர். தொடர்ந்து தினசரி வெள்ளிகேடகம், பூதம்,அன்னம், யானை, பூப்பல்லக்கு, வெள்ளி ரிஷப வாகனம், கைலாயம்,சிம்மம், குதிரை வாகனங்களில் இரவு திருவீதி உலா நடைபெறும்.
மே 16ல் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பில் திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு, தீபாராதனை நடைபெறும். மே 21ல் ஐம்பெரும் கடவுளர் எழுந்தருளி தேரோட்டமும், மே22 ல் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.

