/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருச்சி --- ராமேஸ்வரம் ரயில் மானாமதுரையோடு நிறுத்தம் ராமநாதபுரம் வரை செல்லாததால் பயணிகள் அவதி
/
திருச்சி --- ராமேஸ்வரம் ரயில் மானாமதுரையோடு நிறுத்தம் ராமநாதபுரம் வரை செல்லாததால் பயணிகள் அவதி
திருச்சி --- ராமேஸ்வரம் ரயில் மானாமதுரையோடு நிறுத்தம் ராமநாதபுரம் வரை செல்லாததால் பயணிகள் அவதி
திருச்சி --- ராமேஸ்வரம் ரயில் மானாமதுரையோடு நிறுத்தம் ராமநாதபுரம் வரை செல்லாததால் பயணிகள் அவதி
ADDED : ஏப் 16, 2024 04:06 AM
மானாமதுரை: திருச்சி-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரயில் கடந்த இரண்டு மாதங்களாக பெரும்பாலான நாட்கள் மானாமதுரையோடு நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் காலை 7:00 மணிக்கு புறப்படும் ரயில் புதுக்கோட்டை,காரைக்குடி,சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் சென்று வந்தது. இந்த ரயிலில் ஏராளமான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் பல தரப்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர்.
தற்போது பாம்பன் ரயில் பாலம் மாற்றியமைக்கப்பட்டு வருவதால் இந்த ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே செல்கிறது.
இந்த ரயில் மறு மார்க்கத்தில் மதியம் 3:20 க்கு ராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு மானாமதுரை வழியாக திருச்சி சென்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் போதுமான ரயில்கள் நிறுத்த பிளாட்பாரம் இல்லாத காரணத்தினால் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக இந்த ரயிலை வெள்ளி,ஞாயிறு நாட்களைத் தவிர மற்ற நாட்கள் மானாமதுரை ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படுகிறது.
ரயில்வே பயணிகள் கூறுகையில், திருச்சி,ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் ரயில் கடந்த சில மாதங்களாக 2 நாட்கள் மட்டுமே ராமநாதபுரம் செல்கிறது. மற்ற நாட்கள் மானாமதுரையோடு நிறுத்தப்படுவதால் அங்கிருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது.
ரயில் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்.ஆகவே தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் இந்த ரயிலை தினமும் ராமநாதபுரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தற்போது பாம்பன் பாலத்தில் பணிகள் நடைபெற்று வருகிற காரணத்தினால் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் மண்டபம் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனிலும் போதுமான பிளாட்பாரம் இல்லாத காரணத்தினால் திருச்சி- ராமேஸ்வரம் செல்லும் ரயிலை வாரத்தின் 2 நாட்கள் மட்டும் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டு மற்ற நாட்கள் மானாமதுரை ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டு வருகிறது.
பாம்பன் பாலம் பணிகள் முடிவு பெற்று ராமேஸ்வரத்திற்கு ரயில் பயணம் துவங்கிய பிறகு அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களும் ராமேஸ்வரம் வரை செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

