/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி ஓட்டு எண்ணும் மையத்தில் 243 'சிசிடிவி' கேமராக்கள் கண்காணிப்பு கோடை வெப்பத்தால் பாதிப்பு இல்லை

ADDED : ஏப் 29, 2024 11:56 PM
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜி., கல்லுாரி வளாகத்தில் பொருத்திய 243 'சிசிடிவி' கேமராக்களும் கோடை வெப்பத்தால் பாதிப்பின்றி செயல்படுகிறதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்வதோடு, 'சிசிடிவி' கட்டுபாட்டு அறையில் 'ஏசி'., பொருத்தியுள்ளனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி), ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதியில் உள்ள 1,873 ஓட்டுச்சாவடிகளில் 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்களில் 10 லட்சத்து 49 ஆயிரத்து 675 வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.
3,746 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தலா 1,873 கட்டுப்பாடு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி 'ஸ்ட்ராங்க்'அறையில் வைத்து சீல் வைத்துள்ளனர்.
ஓட்டு எண்ணும் மையத்தில் 243 'கேமரா'
ஓட்டு எண்ணும் மையத்தை கண்காணிக்க 'ஸ்ட்ராங்க்' ரூம் முன்பும், நடைபாதை, கல்லுாரி வளாகத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு கருதி 243 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.
ஊட்டி தொகுதியில் வெயிலின் காரணமாக 'சிசிடிவி' கேமராக்கள் செயல்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அந்த பிரச்னை இங்கு நேரிடாமல் இருக்க, ஓட்டு எண்ணும் மையத்தில் பொருத்திய 243 'சிசிடிவி' கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைக்குள் 'ஏசி' பொருத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது 'சிசிடிவி'., கேமராக்கள் நன்றாக இயங்குகிறதா என்பதை தேர்தல் நடத்தும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்து வருகின்றனர்.