
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் சென்னைக்கு மாறுதல் பெற்று சென்றார். இவருக்கு பதிலாக கோயம்புத்துார் மாநகராட்சி துணை கமிஷனர் எஸ்.செல்வ சுரபி சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
நேற்று பதவியேற்றுக்கொண்ட அவர், கலெக்டர் ஆஷா அஜித்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலரை கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சந்தித்தனர்.

