/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அருகே வரத்து கால்வாயில் மணல் திருட்டு
/
இளையான்குடி அருகே வரத்து கால்வாயில் மணல் திருட்டு
ADDED : மார் 31, 2024 06:38 AM
இளையான்குடி : இளையான்குடி அருகே வைகை வரத்து கால்வாயில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டுமென்றும், புகார் தெரிவித்தாலும் புகாரை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பார்த்திபனுார் வைகை மதகு அணையிலிருந்து சாலைக்கிராமத்திற்கு இடது பிரதான கால்வாய் மூலம் வரத்து கால்வாய் செல்கிறது. இக் கால்வாயில் இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர், முள்ளியாரேந்தல் பகுதிகளில் செல்லும் கால்வாயில் இரவு நேரங்களில் மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு கரையை சேதப்படுத்தி மணல் அள்ளப்படுகிறது. மணல் திருட்டு சம்பந்தமாக இளையான்குடி வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு நீர்வளத் துறை அதிகாரிகள் புகார் கொடுத்தாலும் புகாரை ஏற்க மறுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

