ADDED : ஏப் 14, 2024 10:59 PM
சிவகங்கை: அம்பேத்கர் 134வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் நகராட்சித் தலைவர் துரைஆனந்த் தலைமையிலும், அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் ராஜா தலைமையிலும், வி.சி.க., சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் பாலையா தலைமையிலும் சி.பி.ஐ., சார்பில் நகர செயலாளர் மருது தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* திருப்புத்துாரில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வக்கீல் ரவீந்திரன் தலைமை வகித்தார். வாணியன் கோயில் தெரு பகுதியில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏற்பாட்டினை ராஜா முகுந்தன், வி.சி.நிர்வாகி தீபக்ராஜ் செய்தனர்.
வி.சி.முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கனகுரவி, திலீப்குமார், செல்வம், கருப்பையா, நவதீஸ், ஜெகதீஸ், சரவணன், அருண்மொழி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

