/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாண்டி முனீஸ்வரர் கோயில் பக்தர்கள் பால்குடம்
/
பாண்டி முனீஸ்வரர் கோயில் பக்தர்கள் பால்குடம்
ADDED : ஆக 17, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை கைலாசநாதபுரத்தில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆடி வெள்ளி திருவிழா ஆக.9ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன. அபிராமி அந்தாதி முற்றோதல் பாடினர். சங்காபிஷேகம், பூச்சொரிதல், பூஜைகள் நடந்தன. அக்னிச்சட்டி, பால்குடம், சந்தனக்குடம், வேல்காவடி எடுத்து பக்தர்கள் தீமிதித்து சுவாமியை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

