/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குன்றக்குடியில் ஆக.22ல் அன்னதான கட்டட திறப்பு
/
குன்றக்குடியில் ஆக.22ல் அன்னதான கட்டட திறப்பு
ADDED : ஆக 20, 2024 07:11 AM
சிவகங்கை : குன்றக்குடியில் ஆக., 22 அன்று புதிய அன்னதான கட்டடம் திறப்பு, நுால் வெளியீடு மற்றும் பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
குன்றக்குடி ஆதின மடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு, ஆக., 22 அன்று காலை 10:00 மணிக்கு புதிய அன்னதான கட்டட திறப்பு விழா நடக்கிறது. பொன்னம்பல அடிகள் தலைமை வகிக்கிறார். மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பராமசாரியா சுவாமிகள், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலை வகிக்கின்றனர்.
புதிய அன்னதான கட்டடத்தை எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் பாரிவேந்தர் திறந்து வைக்கிறார். காலை 10:30 மணிக்கு பொன்னம்பல அடிகள் எழுதிய 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்ற நுாலை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் வெளியிட, எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் பாரிவேந்தர் பெறுகிறார்.
காலை 11:30 மணிக்கு நடக்கும் பாராட்டு விழாவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் பாரிவேந்தருக்கு 'திருப்பணி செம்மல்' பட்டம் வழங்கி பாராட்டுகின்றனர்.

