ADDED : ஆக 28, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : தேவகோட்டை அருகே சீனமங்கலத்தை சேர்ந்தவர் பிரகாசம் மகன் அந்தோணி 48. இவர் காளையார்கோவிலில் கட்டட வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அந்தோணி தனது அம்மா சாந்தி அம்மாளிடம் திருப்பூருக்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
பள்ளிதம்பம் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே பலியானார்.
காளையார்கோவில் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

