ADDED : ஏப் 14, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கண்ணங்குடி, தேவகோட்டையில் இன்று மதியம் 12:14 மணிக்கும், கல்லல், காரைக்குடி, காளையார்கோயிலில் இன்று மதியம் 12:15 மணிக்கும், சிவகங்கையில் இன்று மதியம் 12:16 மணிக்கும், திருப்புவனத்தில் மதியம் 12:17 மணிக்கும், திருப்புத்துாரில் மதியம் 12:15 மணிக்கும் சிங்கம்புணரி, எஸ்.புதுாரில் நாளை மதியம் 12:16 மணிக்கும் பூமியில் நிகழும் பூஜ்ய நிழல் நிகழ்வை கண்டுரசிக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.
அவரவர்கள் தாங்கள் இருக்கக்கூடிய இடத்திலேயே மேலே குறிப்பிட்ட நேரத்தில் பூஜ்ய நிழல் தினத்தை குடும்பத்தோடு கண்டு களிக்கலாம் என்றார். விளக்கம் பெற 70109 41705 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

