ADDED : டிச 28, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள குலநாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் 30, சகோதரி பாதாம்பிரியாள். சகோதரியின் மகன்கள் பாண்டீஸ்வரன் 14, தீபக் தர்ஷன் 12, நேற்று காலை சந்தோஷ் டூ வீலரில் நான்கு பேரும் தங்கள் ஊரில் இருந்து திருவாடானைக்கு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளனர்.
பறையனேந்தல் அருகே வரும் போது எதிரே புதுக் கோட்டையை சேர்ந்த வினோத்குமார் ஓட்டி வந்த லாரி, சந்தோஷ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது.
இதில் சந்தோஷ், மற்றும் சகோதரியின் மகன்கள் பாண்டீஸ்வரன், தீபக் தர்ஷன் மூன்று பேரும்காயமடைந்தனர். உறவினர் சுப்பிரமணியன் கொடுத்த புகாரில் தாலுகா போலீசார் லாரி டிரைவர் வினோத் குமாரை கைது செய்தனர்.

