/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர்கோயில்சித்திரை திருவிழா: ஏப்.,14ல் கொடியேற்றம் ஏப்., 23ல் அழகர் ஆற்றில் இறங்குதல்

ADDED : ஏப் 08, 2024 05:42 AM
சிவகங்கை : சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 14ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இக்கோயிலில் ஏப்.,13 அன்று மாலை 6:00 மணிக்கு அனுக்கை,விக்னேஸ்வர பூஜை,அனுக்கை, வாஸ்துசாந்தி பூஜை நடைபெறும்.ஏப்.,14 அன்று காலை 10:00 முதல் 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
அன்று இரவு சுவாமி, அம்பாளுடன் கற்பக விருக்ஷ மற்றும் சிம்ம வாகனத்தில் வலம் வருவார். அதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமி, அம்பாளுடன் பூத, அன்னம், கைலாச, காமதேனு, யானை, கிளி, குதிரை, நந்தி, காமதேனு, இரண்டு ரிஷப வாகனத்தில் வலம் வருவர்.
விழாவின் எட்டாம் நாளான ஏப்., 21ல் காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு யானை வாகனத்திலும், புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருள்வார்.
விழாவின் 9ம் நாளான ஏப்., 22 அன்று அதிகாலை 5:30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளல். அன்று காலை 9:15 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாள் விழாவான ஏப்., 23 அன்று காலை தீர்த்தோத்ஸவம், இரண்டு ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார்.
அன்று இரவு 9:00 மணிக்கு கொடி இறக்குதலுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறும். ஏப்., 24 அன்று 11 ம் நாளில் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். ஏப்., 23 அன்று காலை வெள்ளை குதிரையில் பட்டு உடுத்தி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானிகம் சோமசுந்தர பட்டர் தலைமையில் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.