ADDED : செப் 15, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : தெக்கூர் கிராமத்தில் உள்ள பூர்ண தேவி, புஷ்கலா தேவி சமேத நிறை குளத்து அய்யனார் மற்றும் உலகுடையம்மன் கோயில்களில் திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து இன்று செப்.15ம் தேதி பூர்ணா தேவி புஷ்கலா தேவி சமேத நிறைகுளத்து அய்யனார் கோயிலிலும், நாளை 16ம் தேதி உலகுடையம்மன் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக யாக சாலை பூஜை நேற்று முன்தினம் துவங்கி 3 கால யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது.
இன்று காலை பூர்ணாகுதி முடிந்தவுடன் புனித நீர் அடங்கிய கடங்களை தெக்கூர் முத்துவடுகநாதர், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் கோபுரங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க உள்ளனர்.

