/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருணாநிதி ஒப்புதலுடன் கச்சத்தீவு தாரை வார்ப்பு உண்மை தற்போது வெளிவந்துள்ளது: எச்.ராஜா

ADDED : ஏப் 02, 2024 11:40 PM
காரைக்குடி:''மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடன் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட உண்மை தற்போது வெளிவந்துள்ளது,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்திற்கு எதிராக தி.மு.க.,வும் காங்.,க்கும் கூட்டு சதி செய்ததற்கு ஆதாரம் தற்போது வெளிவந்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி நாடகம் போட்டால் அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இடம் பெறுவதுண்டு. 2009ல் கருணாநிதி 3 மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
ஆனால் 1974ல் மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக தலைமைச் செயலர் சபாநாயகம், உள்துறை செயலாளர் அம்பரூஸ் ஆகிய 4 பேரும் சென்னையில் கூடி அப்போதைய முதல்வரான கருணாநிதி ஒப்புதலுடன் கச்சத்தீவை தாரை வார்த்துள்ள உண்மை வெளிவந்துள்ளது. அப்போது கருணாநிதி இதனை நான் வெளிப்படையாக ஆதரிக்க முடியாது. பிரச்னை வராமல் பார்த்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் எழுத்துப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க பா.ஜ., நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாற்பதாண்டுகளாக சிவகங்கை லோக்சபா தொகுதியை பின்தங்கிய நிலையில் முன்னாள் மத்தியமைச்சர் சிதம்பரம் தரப்பு வைத்துள்ளது. அத்தரப்பின் பிடியிலிருந்து சிவகங்கை விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.