/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் பா.ஜ., பிரசாரம் மந்தம்
/
தேவகோட்டையில் பா.ஜ., பிரசாரம் மந்தம்
ADDED : ஏப் 12, 2024 10:40 PM
தேவகோட்டை : லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசாரத்திற்கு இன்னும் ஆறு தினங்களே உள்ளன.
காங். கூட்டணி வேட்பாளர் கார்த்திக்கிற்கு ஆதரவு கேட்டு வட்டார வாரியாக ஊழியர் கூட்டம்நடத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர் கார்த்தி, நடிகர் கருணாஸ், லியோனி பிரசார கூட்டங்கள் நடத்தினர். வேட்பாளரும் பிரசாரம் செய்து விட்டார். அ.தி.மு.க. வேட்பாளர் சேவியர்தாஸ் இவருக்கு ஆதரவாக தலைமை கழக பேச்சாளர் கூட்டம் நடந்தது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசியும் பிரசாரம் செய்தார்.
ஆனால் தேவகோட்டைக்கு பா.ஜ. கூட்டணி வேட்பாளர் தேவநாதன் அறிவித்த அன்று வரவேற்பு கொடுத்ததோடு சரி அதற்கு பிறகு வரவில்லை. பல கட்சி கூட்டணி இருந்தும் அவருக்கு ஆதரவாக வி.ஐ.பி.க்கள் யாரும் பிரசாரத்திற்கு வரவில்லை. எந்த பணியும் இல்லாமல் பா.ஜ. பிரசாரம் தொய்வாக உள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பும், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பும் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தேர்தல் பணிகளை செய்து வந்த பா.ஜ. வின் பணியில் தொய்வு ஏற்பட்டது.தொகுதி பொறுப்பாளர்கள் இன்னும் ஆறு தினங்களே உள்ள நிலையில் கவனத்தில் கொண்டு தேவகோட்டை தாலுகா பகுதியில் பா.ஜ. கூட்டணி கட்சியினரை முடுக்கி விட வேண்டும்.

