ADDED : ஏப் 09, 2024 12:07 AM

காரைக்குடி : காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே சூடாமணிபுரம் செல்லும் சாலை உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள இந்த சாலையின் இருபுறமும் உணவகங்கள் உள்ளன. தவிர அருகிலேயே நகராட்சி பூங்கா, ஆவின் பாலகம் மற்றும் குடியிருப்பும் உள்ளன.
நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் குப்பை இந்த சாலையில் கொட்டப்படுகிறது. பின்பு அங்கிருந்து லாரிகள்மூலம் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் பலரும்சாலையோர உணவகங்களை நம்பி உள்ளனர்.இரவு நேரங்களில் சாலை ஓர உணவகங்களுக்கு வரும் பயணிகள் குப்பையால் எழும் துர்நாற்றத்தால்மூக்கை பிடித்தவாறு செல்கின்றனர்.
குப்பை கிடங்கு அருகில்உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாதஅளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. உடலுக்கு பல்வேறு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுப்புகின்றனர்.
அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் சாலையோர உணவகம் நடத்துபவர்கள் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையும் இல்லை.

